/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைரமுத்து பேச்சுக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்
/
வைரமுத்து பேச்சுக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்
ADDED : ஆக 11, 2025 04:26 AM
மதுரை: ''ஹிந்து கடவுளான ராமரை 'புத்தி சுவாதீனம் இல்லாதவர்' என விமர்சித்த கவிஞர் வைரமுத்து, ஹிந்துக்களை இழிவு செய்யும் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவருக்கு புரியும் பாஷையில் பதில் அளிக்கப்படும்'' என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுந்தரவடிவேல் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறியிருப்பதாவது: சென்னை கம்பன் கழக விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ஹிந்துக் கடவுளான ராமரை புத்தி சுவாதீனம் இல்லாதவர் என விமர்சித்தார். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில், ஹிந்து பண்பாட்டின் பொக்கிஷமாக போற்றப்படும் ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை கண்டிக்கிறோம். ராமாயண காலத்திற்கும், இந்திய தண்டனைச் சட்ட காலத்திற்கும் என்ன தொடர்பு என்பதை கூட உணராத 'அறிவாளியாக' வைரமுத்து பேசியிருப்பது காழ்புணர்ச்சியின் உச்சம். யாரோ துாண்டிவிடும் கருத்துகளுக்கு 'ஊதுகுழலாய்' இருப்பது, அவரை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
மேடையில் இருந்த இறைநம்பிக்கையுள்ள தமிழறிஞர்கள், அவரது பேச்சை வேடிக்கை பார்த்தது மூலம் கம்பராமாயணம் - வியாபார பொருளாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஹிந்துக்களை இதுபோன்று இழிவு செய்யும் போக்கை வைரமுத்து மாற்றிக் கொள்ளாவிட்டால் அவருக்கு புரியும் பாஷையில் பதில் அளிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.