/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து மலையை காக்க வீடுகளில் சேவல் கொடி ஹிந்து அமைப்புகள் அழைப்பு

ADDED : பிப் 02, 2025 04:52 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க பிப். 4ல் அறப்போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், மலையை பாதுகாக்கவும் முருக பக்தர்களும், ஹிந்துக்களும் தங்களது வீடுகளில் சேவல் கொடி ஏற்ற ஹிந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது: ஹிந்து முன்னணி சார்பில் பிப். 4ல் திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடக்கிறது. அதில் ஹிந்துக்கள், பல்வேறு ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், முருக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இதை தடுக்கும் முயற்சியில் தி.மு.க., அரசும், போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், திருப்பரங்குன்றம் மலை, முருகனுக்கு தான் சொந்தம் என கூறும் வகையிலும் திருப்பரங்குன்றம் பகுதி வாழ் பக்தர்கள், ஹிந்துக்கள் இன்று (பிப். 2)முதல் பிப். 4 வரை தங்களது வீடுகளில் சேவல் கொடி ஏற்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றனர்.