/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதி மீது புகார் கொடுத்ததால் ஹிந்து அமைப்புகளால் ஆபத்து
/
நீதிபதி மீது புகார் கொடுத்ததால் ஹிந்து அமைப்புகளால் ஆபத்து
நீதிபதி மீது புகார் கொடுத்ததால் ஹிந்து அமைப்புகளால் ஆபத்து
நீதிபதி மீது புகார் கொடுத்ததால் ஹிந்து அமைப்புகளால் ஆபத்து
ADDED : ஜூலை 31, 2025 11:18 PM
மதுரை: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்றத்திற்கு மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு அனுப்பி இருந்தார். அது சமூகவலைதளங்களில் வெளியானது.
இதற்கு அ.தி.மு.க., வழக்கறிஞர் ஒருவர்தான் காரணம் என வாஞ்சிநாதன் குற்றம்சாட்டி மதுரை நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். நேற்று அவரிடம் ஒருமணி நேரம் விசாரணை நடந்தது.
நிருபர்களிடம் வாஞ்சிநாதன் கூறியதாவது: உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் புகாருக்கு இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நீதிபதிக்கு ஆதரவாக பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் என்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பதிவு செய்வதால் உயிருக்கு அச்சம் இருக்கிறது. விரைவில் தி.மு.க., உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சியினரையும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு கூறினார்.

