ADDED : ஜன 26, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து கோயில் அறங்காவலர் குழு, தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் ஆகியோர் ஏன் வாய் திறக்கவில்லை. கார்த்திகை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை ஏன் அமல்படுத்தவில்லை.
மதுரை ஆதினம், வேலுார் இப்ராஹிம் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

