/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு முக்கியம் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

ADDED : மார் 18, 2025 05:48 AM
மதுரை: ''பணத்தை குறி வைக்காமல் பக்தர்களின் நலத்தை அறநிலையத்துறை கருத்தில் கொள்ள வேண்டும்'' என திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர் இறந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது: சமீபகாலமாக கோயில் தரிசனத்தின் போது பக்தர்கள் உயிரிழப்பது, மயக்கமடைவது, கூட்டத்தில் சிக்கித் தவிப்பது தொடர் நிகழ்வாகி வருகிறது. அதிக பக்தர்கள் வருவர் என எதிர்பார்த்து கட்டணச் சீட்டுகளை தயார் செய்யும் அறநிலையத்துறை, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மீனாட்சி அம்மன் கோயில், பழநி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பெயரளவிற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் உயிரிழப்புகள் அதிகமாகும். விடுமுறை, திருவிழா, பண்டிகை நாட்களில் பக்தர்களின் வருகையை கண்காணித்து விஞ்ஞானப்பூர்வமாக கூட்டத்தை சமாளிக்கும் முறைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஆலோசனையுடன் வல்லுனர் குழு ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முன்பதிவு தரிசன முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பணத்தை குறி வைக்காமல் பக்தர்களின் நலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். திருச்செந்துாரில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு அரசு உரிய நஷ்ட ஈடும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றார்.