ADDED : செப் 20, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: தமிழ்நாடு ஹிந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் மாநாடு அவனியாபுரத்தில் நடந்தது.
தமிழ்நாடு ஹிந்து வியாபாரிகள் சங்க நிறுவனர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காசி வேலு வரவேற்றார். ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நிலையூர் ஆதீனம் சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரியார் பேசினர்.
மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், துணைச் செயலாளர்கள் சுரேஷ், குமரன், மதுரை மாவட்ட தலைவர் ராமஜெயம், செயலாளர் ஜெசாராம், பொருளாளர் தங்கவேல்ராஜ் , நகர் செயலாளர் அக்னிராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஹிந்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
