/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்களை ஆதரிப்பவர்களுக்கே ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
/
தங்களை ஆதரிப்பவர்களுக்கே ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
தங்களை ஆதரிப்பவர்களுக்கே ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
தங்களை ஆதரிப்பவர்களுக்கே ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2025 04:22 AM

மதுரை:''தங்களை ஆதரிப்பவர்களுக்கே தேர்தலில் ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும்'' என மதுரையில் ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.
மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில், 'திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது' என உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தடை உத்தரவு பெற்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடந்தது.
ராமகிருஷ்ணனுக்கு 'குன்றம் காத்த அதிரதன்' விருது வழங்கி அர்ஜூன் சம்பத் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் மலை வழக்கின் தீர்ப்பு, ஒவ்வொரு முருக பக்தர்களுக்கும்கிடைத்த வெற்றி. ஜனநாயகப்படி அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டது. சட்டப்படி திருப்பரங்குன்றம் மலை மீட்கப்பட்டது.
மஹா பெரியவர், சனாதனத்தை காத்து நின்றவர். ஹிந்து மதத்தில் சீர்திருத்தம் செய்தவர். அவரது திருவடியை பின்பற்றினால் அதுவே சனாதனம்.ஹிந்து மதத்தை பின்பற்றும் அக்மார்க் தமிழர்கள் நாம். ஹிந்துக்கள், ஹிந்துக்களாக மாற வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் யாருக்கும் ஓட்டளிக்க கூடாது ''என்றார்.
வழக்கறிஞர் ராம கிருஷ்ணன் பேசுகையில் ''ஹிந்துக்களுக்கான உரிமைகள் உள்ளன. ஆனால் அவற்றைபாதுகாக்க ஆட்கள் இல்லை. தீர்ப்பு வந்த அடுத்த நாள், 3 முஸ்லிம் முதியவர்கள் என்னை பாராட்டினர். அனைத்துக்கும் பின்னால் முருகன் இருக்கிறார். இந்த பாராட்டு முருகனுக்குரியது''என்றார்.
நடிகர் வையாபுரி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட தலைவர் ரவி, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

