ADDED : ஜூலை 28, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக் போட்டிகளில் திருநகர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் 4 பள்ளிகளின் அணியினர் பங்கேற்றனர். திருநகர் இந்திராகாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். வாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அணி 2 ம் இடம் பெற்றது. போட்டிகளை கமாண்டர் சூரியகாமன் துவக்கி வைத்தார். திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி பரிசு வழங்கினார். மதுரை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஏற்பாடுகள் செய்தார்.

