/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
/
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
ADDED : அக் 11, 2025 05:44 AM
மதுரை: ரயில் பயணிகளின் தேவை, பாதுகாப்பு, கோரிக்கை உள்ளிட்டவற்றை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில், ஸ்டேஷன், கோட்டம், மண்டலம், தேசிய அளவிலான ஆலோசனைக் குழுக்கள் உள்ளன.
இக்குழுவில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், கல்வியாளர்கள், பயணிகள் சங்க நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர். ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியத்தில் ரயில்வே வாரியம் திருத்தம் செய்துள்ளது.
அதன்படி அக். 1 முதல், ஸ்டேஷன் அளவிலான உறுப்பினர்களுக்கு கூட்டம் ஒன்றுக்கு ரூ.180, கோட்ட அளவிலான உறுப்பினர்களுக்கு ரூ.360, பயணப்படி நாளொன்றுக்கு ரூ.180 வழங்கப்படுகிறது.மண்டல அளவிலான உறுப்பினர்களுக்கு ரூ.540, பயணப்படி நாளொன்றுக்கு ரூ.270, தேசிய அளவிலான உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.960 வழங்கப்படுகிறது.
கூட்டம் நடைபெறும் ஊரில் உள்ள உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.360 அல்லது பயண கட்டணம், இரண்டில்எது குறைவோ அது வழங்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.