/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணி நிறைவு, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கவுரவிப்பு
/
பணி நிறைவு, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கவுரவிப்பு
பணி நிறைவு, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கவுரவிப்பு
பணி நிறைவு, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கவுரவிப்பு
ADDED : ஆக 03, 2025 04:34 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் கள்ளர் பள்ளிகள் வருவாய் மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா, மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். பொருளாளர் சாம்ராஜ், அமைப்புச் செயலாளர் புதியாசலம் முன்னிலை வகித்தனர். பணிநிறைவு பெற்ற 13 தலைமையாசிரியர்கள், புதிதாக பதவி உயர்வு பெற்ற, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நிலக்கோட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ், கோச்சடை வைகை டெக்ஸ் சர்வீஸ் உரிமையாளர் பழனிக்குமார் ஆகியோர் பேசினர். ஆறு ஆண்டுகளாக காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ள சுழற்சி முறை குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். மாநிலத் தலைவர் அன்பரசன், பொதுச் செயலாளர் மாரிமுத்து, அமைப்புச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் சாமிசத்தியமூர்த்தி, பீட்டர் ராஜா, கள்ளர் சீரமைப்பு கண்காணிப்பாளர் ராஜா உட்பட மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.