/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழைநீர் தேங்கிய நிலங்களில் தோட்டக்கலை அதிகாரி ஆய்வு
/
மழைநீர் தேங்கிய நிலங்களில் தோட்டக்கலை அதிகாரி ஆய்வு
மழைநீர் தேங்கிய நிலங்களில் தோட்டக்கலை அதிகாரி ஆய்வு
மழைநீர் தேங்கிய நிலங்களில் தோட்டக்கலை அதிகாரி ஆய்வு
ADDED : டிச 16, 2024 05:48 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, உதவி இயக்குனர் கோகிலா சக்தி ஆய்வு செய்தனர்.
மழையால் பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
பாறைப்பத்தி, நிலையூர், வாலானேந்தல், சூரக்குளம், பாப்பனோடை கிராமங்களில் 23.50 ஏக்கரில் வெங்காயம், மிளகாய், வாழை, மல்லிகை பயிரிட்டுள்ளனர். அப்பகுதி வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீர் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் சேத விபரம் குறித்து துணை இயக்குனர், உதவி இயக்குனர் கேட்டறிந்தனர்.
வாழை, மல்லிகை தோட்டங்களில் தேங்கிய மழை நீரை முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடியச் செய்தல் வேண்டும். திருகல் நோயால் பாதித்த வெங்காய பயிர்களிடையே முற்றிலும் பாதித்த செடிகளை அகற்றி, இந்நோய் மேலும் பரவுவதை தடுக்க 'ப்ரோபிகோனோசோல்' என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி., என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்குள் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனஸ் கலவையை ஒரு லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து வேர்கள் நனையும்படி ஊற்ற வேண்டும் என துணை இயக்குனர் பிரபா தெரிவித்தார். உதவி அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தார்.

