ADDED : அக் 10, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: செக்கானுாரணி ஓட்டல் தொழிலாளி சோனு பிரபாகரன் 38. இவரது மனைவி சாந்தி 30. இவர்களுடன் சாந்தியின் அக்கா சுந்தரி 34, கணவர் முடி வெட்டும் தொழிலாளி பிரபுவுடன் 40, ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
சாந்திக்கும் பிரபுவிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி சோனு பிரபாகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். நேற்று காலை ஏற்பட்ட தகராறில் ஸ்குரூ டிரைவரால் மார்பில் பிரபு குத்தியதில் சோனு பிரபாகரன் இறந்தார். பிரபுவை போலீசார் கைது செய்தனர்.