/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீடு கிடைச்சது; மின்சாரம் கிடைக்கலயே பழங்குடியின மக்கள் கவலை
/
வீடு கிடைச்சது; மின்சாரம் கிடைக்கலயே பழங்குடியின மக்கள் கவலை
வீடு கிடைச்சது; மின்சாரம் கிடைக்கலயே பழங்குடியின மக்கள் கவலை
வீடு கிடைச்சது; மின்சாரம் கிடைக்கலயே பழங்குடியின மக்கள் கவலை
ADDED : ஜூன் 21, 2025 03:41 AM

உசிலம்பட்டி: 'தொட்டப்ப நாயக்கனுார் பழங்குடியின மக்களுக்கு வீடு கிடைத்தது, ஆனால் மின்சாரம் கிடைக்கவில்லையே'' என பயனாளிகள் மனப்புழுக்கத்தில் உள்ளனர்.
தொட்டப்பநாயக்கனுார் குறிஞ்சி நகரில் மலைவாழ் பழங்குடியின மக்கள் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு கட்டிக் கொடுத்த, பழுதடைந்த வீடுகளையும், புதிய வீடுகளையும் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறையினர் இணைந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக உசிலம்பட்டி ஒன்றியம் சார்பில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதியை மேம்படுத்தும் திட்டத்தில் 12 புதிய வீடுகள் கட்டப்பட்டன.
அப்பணிகள் முடிந்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர். வனத்துறை சார்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இந்த வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகளை பயனாளிகள் தங்கள் செலவில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கான வழிமுறைகள் தெரியாமலும், பணம் இல்லாமலும் இதுவரை மின் இணைப்பு இன்றி வசித்து வருகின்றனர்.
ஈஸ்வரன் என்பவர் கூறியதாவது: இதற்கு முன்பு வீடுகள் கட்டி மின் இணைப்புடன்தான் பயனாளிகளுக்குக் கொடுத்தனர். தற்போது புதிய மின் இணைப்பை எங்கள் செலவில் பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 12 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. அதிகாரிகள் மின் இணைப்புக்கு உதவ வேண்டும் என்றார்.