ADDED : செப் 26, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை பிரிவுக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திட்டப் பகுதிகளில்
விற்பனையாகாத வணிகமனைகள், பொது உபயோக மனைகள், எஸ்.ஐ.,தொழிற்கூட மனைகள், பள்ளி மனைகள், ஆர்.பி.மத உபயோக மனைகள் என 87 மனைகளுக்கு மின்னணு ஒப்பந்தப் புள்ளி, மின்னணு ஏலத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு செப்.24 ல் இருந்து அக்.9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விபரங்களை https://tnhb.in.gov.in, http://tntenders.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
