நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதிய ஓய்வூதியத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டம் தமுக்கத்திலிருந்து காந்தி மியூசியம் வரை நடந்தது.
மாவட்ட தலைவர் பிச்சைராஜன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பணி ஓய்வு அடிப்படையில் ஊழியர்களை பிளவுபடுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் பால்முருகன், தலைவர் கிருஷ்ணன், டி.ஆர்.பி.யூ., கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன், பாண்டியன், செல்வின் சத்யராஜ், சாலமன், நாகராஜன், சேகர், துளசிராம், சீனிவாசன், ஜெயச்சந்திரன்,மாரிச்சாமி கலந்துகொண்டனர்.