தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘நன்றிக்கு உதாரணம் அனுமன்’

‘நன்றிக்கு உதாரணம் அனுமன்’

‘நன்றிக்கு உதாரணம் அனுமன்’


UPDATED : அக் 10, 2026 01:21 AM

ADDED : அக் 10, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:21 AM ADDED : அக் 10, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில், அகில பாரத ஸாது சங்கம் சார்பில், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண சொற்பொழிவு நடந்தது.

இதில் ‘ராமஜெயம்’ என்ற தலைப்பில் ரெங்கன் ஜி சிஷ்யை காயத்ரி பேசியதாவது: போரில் லட்சுமணரின் வீரத்தை கண்டு வியந்த ராமர் அவரை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்தார். ராமர் பேசுகையில், 'எப்படி ராவணனின் வலது கையான இந்திரஜித்தை எனது வலது கையான லட்சுமணர் கொன்றாரோ, அதுபோல நான் ராவணனை வதம் செய்ய போவதும் சத்தியம்' என்றார்.

தன் சகோதரன் வாலி தீமையின் பக்கம் சென்றதால் ராமர் தக்க தண்டனை கொடுத்தார். அதுபோல ராவணனுக்கும் தக்க பதிலடி கிடைக்கும் என்று சுக்ரீவன் உறுதியாக நம்பினார். இறுதியாக அவர் நினைத்தபடியே நடந்தது.

நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் கடவுளை வேண்டுகிறோம். ஆனால் எந்த நிலையிலும் கடவுளை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். தன் மனம் போன போக்கில், யாரையும் பற்றி சிந்திக்காமல் செயல்பட்ட ராவணன் அழிந்தான் என்று ராமாயணம் சொல்கிறது. தெய்வ பக்தியுடன், திட்டமிட்டு செயல்படும் மன்னனுக்கு துன்பங்கள் எதுவும் வராது. அவன் இறுதி வரை தன் மக்களுக்காக எத்தனை தடைகள் வந்தாலும் வெல்வான். ராமர் வனவாசம் சென்றாலும் அவர் மனதை விட்டு அயோத்தி நகரம் எங்கும் செல்லவில்லை.

அனுமன் ராமருக்காக தன் உயிரையே தர தயாராக இருந்தார். ராமாயணத்தில் இலங்கைக்குச் செல்ல அவர் தன் படையுடன் எழுப்பிய சேது பாலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அந்த பாலத்திற்கு நிகர் எதுவும் இல்லை. ராமருக்கு உதவிசெய்த போதும், கர்வம் இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் 'சீதாராமம்' என்றே உச்சரித்தார். அவர் ராமர் ஒரு தர்மாத்மா என்பதை அறிந்திருந்தார். நன்றிக்கு உதாரணம் அனுமன் என்று ராமாயணம் மூலம் அறியலாம் என்றார்.

அகில பாரத ஸாது சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us