UPDATED : அக் 10, 2026 01:21 AM
ADDED : அக் 10, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் மற்ற தபால் அலுவலகங்களில் அக்., 15 வரை தபால் வார விழா கொண்டாடப்படுகிறது.
அக்., 12 தபால் தலை சேகரிப்பு தினம், அக்., 13 அஞ்சலக சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட நிதி சேவைகள் தினம், அக்., 14 தபால் மற்றும் பார்சல்கள் தினம், அக்., 15 தபால் தொழில்நுட்ப, புத்தாக்க தினம் என ஒவ்வொரு நாளும் துறையின் சேவைகளை விளக்கும் பேனர்கள் வைக்கப்படுவதுடன், கண்காட்சிகள், முகாம்கள், மாணவர்களுக்கான தபால் தலை சேகரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
நேற்று உலக தபால் தினத்தை முன்னிட்டு தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் அவனியாபுரம் நாராயணா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பல்வேறு தபால் சேவைகள் குறித்து தெரிந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோட்ட தபால் துறையினர் செய்துள்ளனர்.
