/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
/
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 03:14 AM
மதுரை: 'தனியார் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, மதுரையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநாடு நேற்று நடந்தது. தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அப்துல்சமது, தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் ராஜ், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் அரசியல் பிரதிநிதித்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் என அனைத்து தளங்களிலும் சிறுபான்மை மக்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தனியார் துறைகளில் சமூகநீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் முறையை கைவிட வேண்டும். மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டிக்கிறோம்.
அரசியல் அமைப்பு முகவுரையில் மதச்சார்பின்மை, சோசலிஷம் போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என துணை ஜனாதிபதி பேசியது கண்டனத்திற்குரியது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.