நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ; மதுரை மேற்கு நுழைவாயில் அருகே எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (ஜன.8) முதல் ஜன. 11 வரை 4 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. கோட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் பேசினர்.
ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்ட செயலாளர் அழுகுராஜா, கோட்ட தலைவர் ரவிசங்கர், உதவிகோட்ட செயலாளர்கள் சீதாராமன், சபரிவாசன், செந்தில் ஜூலியன், ஜெயராமன் கலந்து கொண்டனர்.