ADDED : ஆக 14, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை இந்தியா இயக்கம், ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) சார்பில் துாய்மை விழிப்புணர்வு அணிவகுப்பு நடந்தது.
ரயில்வே சுகாதார இன்ஸ்பெக்டர் கார்த்திகை வேணி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் பாலசுப்பிரமணியன், ஆவுடையப்பன் முன்னிலையில் 8 துாய்மை ஊழியர்கள், மதுரைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை பயணிகளுக்கு விளக்கினர்.

