/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எனக்கும் கூடத்தான் மனவருத்தம் இருக்கு செல்லுார் ராஜூ பேட்டி
/
எனக்கும் கூடத்தான் மனவருத்தம் இருக்கு செல்லுார் ராஜூ பேட்டி
எனக்கும் கூடத்தான் மனவருத்தம் இருக்கு செல்லுார் ராஜூ பேட்டி
எனக்கும் கூடத்தான் மனவருத்தம் இருக்கு செல்லுார் ராஜூ பேட்டி
ADDED : நவ 03, 2025 04:43 AM
மதுரை:  ''எனக்கும் கூடத்தான் மனவருத்தம் இருக்கு. அதற்காக பொது வெளியில் தெரிவிக்கலாமா. கட்சிச் செயலாளரை நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
செங்கோட்டையனை பொதுச் செயலாளர் பழனிசாமி அ.தி.மு.க.,விலிருந்து நீக்கியுள்ளார். தலைமை சொல்வதற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். எனக்கு கூடத்தான் மன வருத்தம் இருக்கு. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை பொதுச் செயலாளரை பார்த்து நேரில் தான் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, ஊடகங்கள் மூலம் தெரிவிக்கக் கூடாது.
ஒரு கட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதை நான் சொல்வதன் மூலம் 'செல்லுார் ராஜூவுக்கு ஏதோ மன வருத்தம் இருக்கிறது' என எழுதிவிடாதீங்க. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னைப் பொதுச் செயலாளர் நன்றாக தான் வைத்திருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் தனக்கு வரும் அனைத்து பந்துகளையும் 'சிக்ஸர்' அடிக்கிறார் பழனிசாமி. கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லக் கூடியவரை நாம் பாராட்ட வேண்டும். கரூர் சம்பவம் குறித்து தாமதமாக நடிகர் அஜித் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை மவுனம் சாதித்துவிட்டு தற்போது ஏன் சொல்கிறார் எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

