/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தியால் கிடைத்தது பட்டா
/
தினமலர் செய்தியால் கிடைத்தது பட்டா
PUBLISHED ON : டிச 26, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை ஒத்தக்கடையில் துணை முதல்வர் உதயநிதி 17 மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலுாரில் 1,070 பேருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இணையதளத்தில் பயனாளிகள் பெயருக்கு பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவில்லை. அதனால் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை பெற முடியாமல் பயனாளிகள் அவதிப்பட்டனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

