ADDED : ஜூலை 13, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
யூரியா 3160 டன், டி.ஏ.பி., 934 டன், பொட்டாஷ் 1173 டன், காம்ப்ளக்ஸ் 5913 டன் இருப்பு உள்ளது. ஜூலை மாதத்திற்கான 2300 டன் யூரியா பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு உரம் இருப்பு உள்ளது. மேலும் வேளாண் துறையின் கீழ் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள்,சூடோமோனஸ், டி விரிடி இருப்பில் உள்ளது என்றார்.

