/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணம் இருக்கு; இடமில்லை நிலம் கொடுக்க மனம் இருக்கா
/
பணம் இருக்கு; இடமில்லை நிலம் கொடுக்க மனம் இருக்கா
ADDED : மே 01, 2025 06:38 AM

சோழவந்தான்: சோழவந்தானில் புதிய நுாலகம் கட்ட நிதி ஒதுக்கி 5 ஆண்டுகளாகியும் இடம் கிடைக்காததால் பணி துவங்காமல் உள்ளது.
இங்குள்ள அக்ரஹாரத்தில் நீண்ட காலமாக கிளை நுாலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களுக்கு மைய நுாலகமாக இது செயல்படுகிறது. மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உள்பட பலர் வருகின்றனர். அதற்கேற்ப இடவசதி, கழிப்பிடம், வெளிச்சம், காற்றோட்டமில்லை. இதனால் நுாலகம் வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.
நுாலக வாசகர் கூறுகையில், ''புதிய நுாலக கட்டடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அரசு நிதி ஒதுக்கி விட்டது. நுாலகத்துக்கு ஐந்து சென்ட் இடம் தேவை. பேரூராட்சி, வருவாய் துறையினரிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் இடம் கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்.