/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளம் மேடு பார்த்து போகணும்; பக்குவமா வாகனத்த ஓட்டணும்
/
பள்ளம் மேடு பார்த்து போகணும்; பக்குவமா வாகனத்த ஓட்டணும்
பள்ளம் மேடு பார்த்து போகணும்; பக்குவமா வாகனத்த ஓட்டணும்
பள்ளம் மேடு பார்த்து போகணும்; பக்குவமா வாகனத்த ஓட்டணும்
ADDED : ஆக 20, 2025 01:39 AM

மேலுார்; மேலுார் செமினிபட்டியில் புதிதாக அமைத்த தார் ரோடு பெயர்ந்ததால் ரோட்டின் தரம் கேள்விக்குறியாகி வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
செமினிபட்டி ஊராட்சி முத்துசாமி பட்டி - கரையிப்பட்டி வரை 5 கி.மீ., க்குள் சுமதிபுரம், நெய்காரகுடிப்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளன.
இக் கிராமங்களில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய அவசிய தேவைகள், படிப்பு, அலுவல் பணிகளுக்கு மேலுார், சிங்கம்புணரிக்கு தினமும் பலநுாறு பேர் சென்று வருகின்றனர்.
இந்த ரோட்டில் ஏராளமான வழிபாட்டு தலங்களும் உள்ளன. இந்த ரோடு சிதிலமடையவே கடந்த ஜூலையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.69 கோடியில் அமைத்த தார் ரோடும் சிதிலமடைந்து விட்டது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது : புதிதாக ரோடு அமைத்து முப்பதே நாட்களில் ரோட்டோரங்களில் வெடிப்பு ஏற்பட்டு ரோடு பெயர்ந்து விட்டது. வயலில் இருந்து மணலை அள்ளி ரோட்டோரம் போட்டதால் வயல் பள்ளமாகி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக பெய்யும் மழைக்கு ரோட்டோரம் அடித்துச் செல்லப்பட்டதால் சில மாதங்களில் ரோடு முழுவதும் சிதிலமடையும் நிலையில் உள்ளது. தரமற்ற ரோடால் வரிப்பணம் வீணாவதோடு, மக்கள் பயணம் செய்யவே அஞ்சும் நிலை உள்ளது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து தரமான ரோடு அமைக்க வேண்டும் என்றனர்.