/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுக்குப்பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
/
உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுக்குப்பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுக்குப்பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுக்குப்பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
ADDED : ஜூலை 18, 2025 04:28 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகம் 1910 ல் துவக்கப்பட்டது. அன்று ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் இருந்ததால் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. தற்போது உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாக்கள் மட்டுமே உள்ளன. அப்போதைய ஐ.சி.எஸ்., படித்த பேர்பிரைன், லாக்லின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பண்டா, ஸ்ரீபதி, ஷீலாபிரியா, சௌபே, ஹேமந்த்குமார் சின்கா உதவி கலெக்டர்களாக இங்கு பணிபுரிந்துள்ளனர்.
1994 ஏப்., முதல் 1995 செப்., வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி பாபுலால் மீனா உதவி கலெக்டராக பணிபுரிந்தார். அதன் பிறகு ஆர்.டி.ஓ., க்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது சண்முகவடிவேல் ஆர்.டி.ஓ., வாக உள்ள நிலையில், அவருக்கு பதில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்துள்ள உட்கர்ஷ்குமார் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு உசிலம்பட்டிக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.