UPDATED : அக் 10, 2026 08:23 PM
ADDED : அக் 10, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்:உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி அழகு பாண்டி 41.
துாத்துக்குடி குலசேகரப்பட்டினம் திருவிழாவில் ஐஸ் விற்க முடிவு செய்தார். இதற்காக திருமங்கலம் மறவன்குளத்தில் உள்ள நண்பரையும் அழைத்துச்செல்ல நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் வந்தார். மறவன்குளம் மெட்டல் பவுடர் கம்பெனி எதிரே மதுரை - விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது கோவையிலிருந்து தென்காசி சென்ற கார் மோதியது. இதில் அழகு பாண்டி பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
