தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/எய்ட்ஸ் 'ரிஸ்க்' மாவட்டங்களில் மதுரையும் உண்டு

எய்ட்ஸ் 'ரிஸ்க்' மாவட்டங்களில் மதுரையும் உண்டு

எய்ட்ஸ் 'ரிஸ்க்' மாவட்டங்களில் மதுரையும் உண்டு


UPDATED : அக் 11, 2026 01:14 AM

ADDED : அக் 10, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:14 AM ADDED : அக் 10, 2026 05:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தமிழகத்தில் மதுரை உட்பட 15 மாவட்டங்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியவையாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் ஜெயபாண்டி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் 'எய்ட்ஸ் குறித்து அதிக கவனம்' செலுத்த வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே நோய்ப்பரவல் இருந்த நிலையில் மதுரை மாவட்டமும் 'தீவிர கவனம்' செலுத்த வேண்டிய பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. தன்பாலினச்சேர்க்கை, பாலியல் பெண் தொழிலாளிகள், மூன்றாம் பாலித்தனவர்கள், நரம்பு வழியே போதை மருந்து செலுத்துவோரிடையே எய்ட்ஸ் பரவல் காணப்படுகிறது. இவர்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் கண்டறிந்து கவுன்சிலிங் கொடுத்து ரத்தப்பரிசோதனை செய்ய வைக்கிறோம்.

மேலும் கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் குறித்து சுயமதிப்பீடு செய்வது குறித்த போஸ்டர்கள் ஒட்டியுள்ளோம். அதில் உள்ள கியூ.ஆர். கோடை அலைபேசியுடன் இணைத்தால் 7 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதில் அளிப்பதைப் பொறுத்து அவருக்கு சிகிச்சை தேவையா, கவுன்சிலிங் தேவையா என வழிகாட்டப்படும். எய்ட்ஸ் இருக்கலாமென சந்தேகம் வந்தால் அடுத்து யாரை எங்கே பார்க்க வேண்டும் என்ற விவரங்களும் இணைத்துள்ளோம். இதற்கு முன் பாலின நோய், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டோம். தற்போது கூடுதலாக ஹெபடிட்டிஸ் பி, சி நோய்க்கும் சேர்த்து விழிப்புணர்வு செய்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us