தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை

மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை

மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை


ADDED : ஆக 27, 2025 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

பஸ்களில் 25 கிலோ வரை பொருட்களை கட்டணமின்றி எடுத்து செல்வது, சுயஉதவி குழுக்களுக்கு அரசு மானிய திட்டங்கள், முன்னுரிமை, மானிய உதவிகள் (பயிர்க்கடன், கால்நடை கடன், சிறுவணிக கடன், தொழில் முனைவோர் மாற்றுத்திறனாளிகள் கடன்), கோ-ஆப்டெக்ஸ், ஆவின் கடைகளில் தள்ளுபடி சலுகைகள், இ சேவை மையங்களில் சேவை கட்டண சலுகைகள், சுயஉதவி குழுக்களுக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் பெறலாம்.

அடையாள அட்டை பதிவுக்காக வீடுதேடி அலுவலர்களிடம் மகளிர் குழுவினர் தங்கள் போட்டோ, ஆதார், ரேஷன் அட்டை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (94440 94306), நகர வாழ்வாதார மையம், கே.புதுார், மதுரை (70100 50858), திருமங்கலம் நகர வாழ்வாதார மையம் (92453 08748), மாநகராட்சி மண்டலம் மூன்று, (93446 78799), முனிச்சாலையில் உள்ள மண்டலம் 4 அலுவலகம் (98426 43204) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us