ADDED : பிப் 11, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மத்திய அரசு விவசாயிகளை ஒருங்கிணைத்து தனி குறியீட்டு (அடையாளம்) எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மதுரை கிராமங்களில் துவங்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:
பல்வேறு துறைகளின் சலுகைகளை பெறும் வகையில் விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் வழங்க உள்ளது. அதற்கான தகவல்கள் பதிவேற்றம் மதுரை மாவட்டத்தில் உள்ள 616 கிராமங்களில் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபார்க்கும் பணி துவங்கப்பட்டுஉள்ளது.
வேளாண் துறை அலுவலர்கள், மகளிர் திட்டத்தின் கிராம அளவிலான சமுதாய வள பயிற்றுநர்கள் வருவாய் கிராமத்திற்கு வரும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசியுடன் ஆதார் அட்டை, நில உடைமை பட்டாவுடன் சென்று பதிவு செய்து விவசாயிகள் தங்களுக்கான அடையாள எண் பெறலாம் என்றார்.