/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழும்' : அமைச்சர் வேலுமணி
/
'அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழும்' : அமைச்சர் வேலுமணி
'அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழும்' : அமைச்சர் வேலுமணி
'அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழும்' : அமைச்சர் வேலுமணி
ADDED : ஆக 26, 2025 04:03 AM
மதுரை: 'அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழும்' என முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு வருவதையொட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆலோசனை வழங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன் பங்கேற்றனர்.
வேலுமணி பேசியதாவது: மதுரைக்கு எழுச்சிப் பயணம் வரும் பழனிசாமி விரைவில் கோட்டைக்குச் செல்வார். தி.மு.க., ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை ஆட்சிக்கு வராது என்ற வரலாறு உள்ளது. மதுரை மாநாட்டில் த.வெ.க., தலைவர் விஜய், அ.தி.மு.க., தலைமை யாரிடம் உள்ளது என்று பேசியுள்ளார். அ.தி.மு.க., தலைவர் பழனிசாமிதான் என்பது அவருக்கு தெரியவில்லை.
பழனிசாமியைப் பற்றி பேச விஜய்க்கு உரிமை கிடையாது. அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். இதை விஜய் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது.
பழனிசாமி ஒரு விவசாயியாக பிறந்து நாட்டை ஆளமுடியும் என்ற வரலாற்றை உருவாக்கினார். நான்கு ஆண்டுகள் 2 மாதம் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தார். அதன்மூலம் ஆண்டுதோறும் 600 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்கிறார்கள். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லுாரிகளைக் கொண்டு வந்தார். கொரோனா காலத்தில் மாணவர்கள் ஆல்பாஸ் வழங்க ஏற்பாடு செய்தார்.
மதுரைக்கு 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை வராத வகையில் 1292 கோடி ரூபாயில் திட்டம் கொண்டு வந்தார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான இந்த இயக்கம் 32 ஆண்டுகள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. பழனிசாமி 1989 முதல் எம்.எல்.ஏ., வாகி படிப்படியாக உயர்ந்து முன்னேறியவர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜய்க்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

