/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பன்னீர்செல்வம், சசிகலாவை சேர்த்தால் அ.தி.மு.க.,வில் குழப்பமே மிஞ்சும் ராஜன் செல்லப்பா எச்சரிக்கை

ADDED : அக் 24, 2024 05:28 AM
திருப்பரங்குன்றம்: ''அ.தி.மு.க.,வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனை சேர்த்தால் குழப்பமே மிஞ்சும்'' என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.
தேவர் ஜெயந்திக்கு மதுரை வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
ராஜன் செல்லப்பா கூறியதாவது: திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு இடையூறின்றி நவ. 7, 8 ல் பக்தர்களின் திருமணங்கள் நடக்க அனுமதிக்க வேண்டும். கோயில் முன்பு பல ஆண்டுகளாக பூக்கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டோருக்கு வேறு இடம் கொடுக்க வேணடும். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுக்க வேண்டியது முதல்வர், துணைமுதல்வரின் கடமை. ஆனால் இருவரும் கோபப்படுகின்றனர். இதனால் அவர்கள் பலவீனமாகிவிட்டது தெரிகிறது. தி.மு.க., கூட்டணிக்கு இது வீழ்ச்சி காலம். அ.தி.மு.க., ஆட்சி அமைக்க பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை இணைக்க வேண்டும் எனகின்றனர். அவர்களை சேர்த்தால் மீண்டும் குழப்பம் தான் ஏற்படும் என்றார்.