/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் அறுவடை முடிந்து விட்டதா உளுந்து விதைத்தால் லாபம்
/
நெல் அறுவடை முடிந்து விட்டதா உளுந்து விதைத்தால் லாபம்
நெல் அறுவடை முடிந்து விட்டதா உளுந்து விதைத்தால் லாபம்
நெல் அறுவடை முடிந்து விட்டதா உளுந்து விதைத்தால் லாபம்
ADDED : ஜன 14, 2025 05:24 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் நெல் அறுவடை முடிந்த விவசாயிகள் நிலத்தை தரிசாக விடாமல், அறுவடைக்கு முன்போ, பின்போ உளுந்து விதைத்து லாபம் ஈட்டலாம்.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: நெல் அறுவடை முடிந்து அடுத்த நெல் விதைப்புக்கு தயாராக உள்ள விவசாயிகளுக்கான உரங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 5100 டன், டி.ஏ.பி., 575, பொட்டாஷ் 1150, காம்ப்ளக்ஸ் 2400, சூப்பர் பாஸ்பேட் 550 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உளுந்து 70 முதல் 75 நாட்கள் பயிர் என்பதால் நெல் அறுவடைக்கு பின் தண்ணீர் பற்றாக்குறையால் தரிசாக விடும் விவசாயிகள் குறைந்த தண்ணீரில் உளுந்து விதைக்கலாம். நெல் அறுவடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பாக உளுந்தை விதைக்கலாம். அல்லது அறுவடை செய்த 3 நாட்களுக்குள் ஈரம் காய்வதற்கு முன்பாக விதைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கான 8 கிலோ விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். வேளாண் விரிவாக்க மையங்களில் 6500 கிலோ உளுந்து விதை இருப்பு உள்ளது.
விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உளுந்து விதைத்தால் தனியாக லாபம் கிடைக்கும். அடுத்து நெல் சாகுபடி செய்யும் போது மண் வளம் அதிகரித்து மகசூல் கூடுதலாக கிடைக்கும் என்றார்.

