/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிக மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி தள்ளாடி இருக்கும்
/
அதிக மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி தள்ளாடி இருக்கும்
அதிக மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி தள்ளாடி இருக்கும்
அதிக மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி தள்ளாடி இருக்கும்
ADDED : அக் 18, 2024 05:42 AM
திருப்பரங்குன்றம்: 'வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தபடி மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி நிர்வாகம் தள்ளாடி இருக்கும்' என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறியதாவது: சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டது என வெள்ளை அறிக்கை தர முடியுமா.
வானிலை மையம் அறிவித்தபடி மழை பெய்திருந்தால் தி.மு.க., ஆட்சி நிர்வாகம் தள்ளாடியிருக்கும். ஒரு நாள் மழைக்கே சென்னை இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை முடிக்காமல் தி.மு.க., ஆட்சி இழுத்தடிக்கிறது. பெருமழை பெய்தால்தான் இவர்களது நிலை மக்களுக்கு புரியும் என்றார். பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.