sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம்: நடிகர் குரு லக் ஷ்மண்

/

நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம்: நடிகர் குரு லக் ஷ்மண்

நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம்: நடிகர் குரு லக் ஷ்மண்

நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம்: நடிகர் குரு லக் ஷ்மண்


ADDED : செப் 07, 2025 10:45 AM

Google News

ADDED : செப் 07, 2025 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்த ஊர் மதுரை. அப்பா போலீஸ் எஸ்.ஐ., அம்மா இல்லத்தரசி. சாதாரண நடுத்தர குடும்பம். சென்னை சென்று இன்ஜினியரிங் படித்தேன்.

சிறு வயதில் இருந்து சினிமா ஆர்வம், கல்லுாரி நாட்களிலே குறும்படம் போன்றவை தான்என் கலை பயணத்தை துவக்கியது. பெங்களூருவில் பணிக்கு சென்ற போதும், ஒரு குழுவாக குறும்படம் எடுத்தோம்.'வுமன்' என்ற குறும்படம் ஏ.வி.எம்.,ல் திரையிட்ட போது வரவேற்பு பெற்றது.

முதலில் நடிக்க பயமாக இருந்தது. நடிக்கும் எண்ணமே இல்லை. எழுத்து, எடிட்டிங், இயக்கம் என முயற்சித்தேன். ஆனால் 'வுமன்' குறும்படம் பாராட்டை பெற்றதால் நடிக்க துவங்கினேன். நடன ஆல்பங்கள் செய்தோம். பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் ஒரு பக்கம் பணியும், இன்னொரு பக்கம் நடிப்புமாக இருந்தது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலை இருந்தது. இதற்கு மேல் வேலையை விடாவிட்டால் பிரபஞ்சம் நமக்கு எந்த உதவியும் செய்யாது என தோன்றியது. உள்ளுணர்வின்தேடலால் வேலையை விட்டு சினிமாவே கதியென வந்தேன்.

'ஹார்ட் பீட்' வெப்சீரிஸ் எனக்கு பெயர் பெற்று தந்தது. அதை இயக்கியவர் அப்துல். அவரது அடுத்த சீரிஸ் தான் 'ஆபீஸ்'. ஒரு கமர்ஷியல் ஸ்கிரிப்ட்டை வடிவமைப்பது கடினம். காமெடியை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்க்க நிறைய உழைக்க வேண்டும். இதற்கு காரணம் இயக்குனர் அப்துல் தான்.

வெப் சீரிஸில்லவ், காமெடி கதை எனக்கு செட் ஆனது. ஆனால் வரும் நாட்களில் த்ரில்லருக்கு நல்ல இயக்குனர், கதைக்களம் அமைந்தால் வெற்றி நிச்சயம்.

என் குழுவில் நான், ராஜா, விஷ்வா என்ற மூன்று பேர் தான் துவங்கினோம். அதற்கு பின் வந்தது எல்லோரும் புது முகம் தான். வசந்த், ரேஷ்மா, தீபா பாலு போன்ற புதிய நடிகர்கள் எங்களோடு பயணித்து இப்போது ஜொலித்து வருகின்றனர். திறமைக்கு, நேர்மையாக இருந்தால் யாராக இருந்தாலும் ஜொலிக்க முடியும் என்றார்.






      Dinamalar
      Follow us