/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாப்பிடாமல் போனால் ரத்தம் கக்கி சாவீங்க... செல்லுார் ராஜூ கலகல
/
சாப்பிடாமல் போனால் ரத்தம் கக்கி சாவீங்க... செல்லுார் ராஜூ கலகல
சாப்பிடாமல் போனால் ரத்தம் கக்கி சாவீங்க... செல்லுார் ராஜூ கலகல
சாப்பிடாமல் போனால் ரத்தம் கக்கி சாவீங்க... செல்லுார் ராஜூ கலகல
ADDED : ஜூன் 29, 2025 05:01 AM
மதுரை: மதுரையில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 'பிரியாணி ரெடியாக உள்ளது;சாப்பிட்டு செல்லுங்கள். சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி சாவீங்க..' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியது சிரிப்பலை ஏற்படுத்தியது.
மதுரை தெப்பக்குளத்தில் அ,தி.மு.க., மாநகர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் நேற்று நடந்தது. நிர்வாகிகள் குமார், அண்ணாதுரை, ராஜா முன்னிலை வகித்தனர். செல்லுார் ராஜூ பேசியதாவது: மதுரையில் உள்ள 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., உறுதியாக வெல்லும். 'தி.மு.க.,வை ஒழிக்கும் வரை ஓயாமல் பாடுபட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்'.அதற்கு பெருவாரியாக இளைஞர்கள் களப்பணிக்குவர வேண்டும். அவர்களுக்கு மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்க வேண்டும்.மதுரைக்குசுற்றுப்பயணம் வரும்அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதால் ஊடகங்கள் வெளியே செல்லலாம் என செல்லுார் ராஜூ தெரிவித்தார். அப்போது, 'அனைவருக்கும் பிரியாணி ரெடியாக உள்ளது; சாப்பிட்டு செல்லுங்கள். சாப்பிடாமல் சென்று விடாதீர்கள், ரததம் கக்கி சாவீங்க..' என சிரித்து கொண்டே கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.