/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மெய்யான கடவுள் பக்தி இருந்தால் பிளாஸ்டிக் ருத்ராட்சம் கூட அணியலாம் நெரூர் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள் பேச்சு

ADDED : பிப் 20, 2026 05:36 AM

மதுரை:மெய்யான கடவுள் பக்தி இருந்தால் பிளாஸ்டிக்கில் செய்த ருத்ராட்சம் கூட அணியலாம். இதனை உணர தீவிர பக்தி தேவைப்படும் என நெரூர் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள் மதுரையில் பேசினார்.
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபத்தில் நேற்று முதல் பிப்.25 வரை சிவநாம வேள்வி நடந்து வருகிறது.
நெரூர் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள் குருவே சிவம் என்ற தலைப்பில் நேற்று நடந்த சொற்பொழிவில் பேசியதாவது: உபநிஷத்தில் விபூதியை தட்டிலிருந்து எப்படி எடுக்க வேண்டும், பூச வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. விபூதியின் மகிமை, ருத்ராட்சத்தை எங்கு, எப்படி அணிய வேண்டும் என்பதை பெற்றோர்கள் இன்றைய தலைமுறையினருக்கு கற்றுத்தருவது அவசியம். மெய்யான கடவுள் பக்தி இருந்தால் பிளாஸ்டிக்கில் செய்த ருத்ராட்சம் கூட அணியலாம். இதனை உணர தீவிர பக்தி தேவைப்படும்.
'அவரவர் விருப்பமான தெய்வத்தை வழிபட உரிமை உள்ளது' என அத்வைதம் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருக்கான பாரம்பரியம், குலதெய்வ வழிபாடு குறித்து அறிந்திருக்க வேண்டும். எல்லாரும் அத்வைத சித்தாந்தம் குறித்து அறிந்துகொண்டால் வாழ்வின் உன்னதத்தை உணர முடியும். ஆதிசங்கரர் தெய்வங்களில் ஏற்றத் தாழ்வு இல்லை என்று வலியுறுத்துகிறார். வேத பாராயணம்; அந்தாதி சொல்ல சுவாமி தவழ்ந்து செல்லும், திருவையாறு வீதி புறப்பாட்டை வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
எண்மர் போற்றும் எண்குணத்தான் என்ற தலைப்பில் தினமும் மாலை 5:00 மணி முதல் 8:15வரை குருநாதர் காப்பாற்றுவார், குரு அருளால் தீட்சை, நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் , தேடி கண்டு கொண்டேன், தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை, மீளா அடிமை உமக்கே ஆனாய் ஆகிய தலைப்புகளில் இசை நிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவுகள் நடக்கின்றன. பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என மடம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.