/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமணர்கள், பவுத்தர்களை வேதத்தை எதிர்த்தவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
/
சமணர்கள், பவுத்தர்களை வேதத்தை எதிர்த்தவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
சமணர்கள், பவுத்தர்களை வேதத்தை எதிர்த்தவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
சமணர்கள், பவுத்தர்களை வேதத்தை எதிர்த்தவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
ADDED : பிப் 20, 2026 05:36 AM

மதுரை: சங்க காலத்தில் பவுத்தர்கள், சமணர்கள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் இல்லை. எனவே வேதத்தை எதிர்த்தவர்கள் சமணர்கள், பவுத்தர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது என மதுரையில் நடந்த 'தமிழர்களின் தாய்மதம்' எனும் நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேசினார்.
ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் நாளை (பிப். 21) வரை நடக்கும் இச்சொற்பொழிவில், 'சங்க காலத்தின் சமயம் எது' என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது: வேதங்களில் உட்பிரிவுகள் பல இருந்தாலும், அவற்றின் தத்துவம் ஒன்று தான். அது வேதங்களை எதிர்ப்பவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை கற்க வேண்டும் என்பதே. தமிழறிஞர் சண்முகம் பிள்ளை 'சங்கத் தமிழரின் வழிபாடும், சடங்குகளும்' என்ற நுாலில், சங்க இலக்கியங்களில் உள்ள கிராமிய தெய்வங்கள், புறச்சமயங்கள் பற்றி பேசியிருக்கிறார். அதில் சில பாடல்களில் பள்ளி என்ற சொல்சமணர்களின் வழிபாட்டுத் தலத்தை குறிக்கும் என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்.
'சடை கொண்ட முனிவர்கள் தவப்பள்ளி' என்று பட்டினப்பாலையில் வருவதை எடுத்துக்காட்டியுள் ளார். அது மட்டுமில்லாமல் 'மதுரைக்காஞ்சியில் கடவுள் பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது' என்கிறார்.சங்க காலத்தில் பவுத்தர்கள், சமணர்கள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் இல்லை. எனவேவேதத்தை எதிர்த்தவர்கள் சமணர்கள், பவுத்தர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே பள்ளி என்கிற சொல் சமணர்களின் வழிபாட்டு தலத்தை குறிக்க வாய்ப்பில்லை.
வேதம் தான் வேர் சாவகர்கள் என்றால் சமண சீடர்களைக் குறிக்கும். ஆனால் அது சிராவகர் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்துதிரிந்து வந்தது நிறைய பேருக்கு தெரியாது.
சமணஎன்கிற சொல்லே சிரமண என்கிற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ரிஷி முனிவர்களை சிரமணர்கள் என்று சொல்வார்கள்.சாஸ்திரங்களில் 'ரிக் வேதம் பயிலும் சிராவகரை வேத வியாசர் ஏற்றுக்கொண்டார்' என விஷ்ணு புராணம் கூறுகிறது. சிராவகம் என்பதற்கு கேட்கச்செய்பவன் என்று பொருள். இது எப்படி சீடனுக்கு வரும். வேத பாட சாலையில் தான் சீடன் கேட்கச் செய்கிறான்.
'நுாறு முறை சீடன் சொல்லி குரு கேட்க வேண்டும்'என்றும் வேதபாடசாலை நெறிமுறை இருக்கிறது. வேத ஆகமம் என்பதையும் கூட தற்போதுபிற மதங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவ்வாறு பேசினார்.
இன்று மாலை 6:30 மணிக்கு திருக்குறளின் சமயம் எது என்ற தலைப்பில் சொற்பொழிவு தொடர்கிறது. ஏற்பாடுகளை ராம சமாஜத்தினர் செய்து வருகின்றனர்.

