/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அமைச்சர் தியாகராஜன் பெயரைக்கூறி மற்றொரு உதவியாளரும் ரூ.பல கோடி சுருட்டல் போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ்

ADDED : பிப் 20, 2026 07:00 AM

மதுரை: மதுரையில், அமைச்சர் பெயரைக்கூறி, மோசடியில் ஈடுபட்டு, முன்னாள் உதவியாளர், அவரது மனைவி கைதான நிலையில், மற்றொரு முன்னாள் உதவியாளர் தலைமறைவாக உள்ளதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மதுரையில்தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் பெயரை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, 42, அவரதுமனைவி கலாவதி 42, ஆகியோரைமத்திய குற்றப்பிரிவு போலீசார்பிப்., 5ல்கைது செய்தனர்.
ஜெய் பாலாஜி போல் மற்றொரு உதவியாளராக இருந்தவர் இலக்குவன். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.
அமைச்சர் தியாகராஜன் தி.மு.க.,வில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மாநில துணை அமைப்பாளராக இருந்தார். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
திருநெல்வேலி தொழிலதிபர் ஒருவரின் 14 கோடி ரூபாய் பணம் இலக்குவன், ஜெய் பாலாஜி கைக்கு வந்தபோது அதை அமைச்சரிடமிருந்து மறைக்க நினைத்தபோதுதான் இருவர் மீதும் நடவடிக்கைகள் ஆரம்பமானதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
ஜெய் பாலாஜி கைதை தொடர்ந்து இலக்குவன் தலைமறைவானார். சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
வெளிநாடு ஒன்றில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.