sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவரை தண்டனை தராதது ஏன்? விவசாயிகள் சங்கம் கேள்வி

/

 நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவரை தண்டனை தராதது ஏன்? விவசாயிகள் சங்கம் கேள்வி

 நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவரை தண்டனை தராதது ஏன்? விவசாயிகள் சங்கம் கேள்வி

 நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவரை தண்டனை தராதது ஏன்? விவசாயிகள் சங்கம் கேள்வி


ADDED : பிப் 21, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தமிழக ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் -- 2007ன் கீழ், இதுவரை ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு கூட சிறை தண்டனையோ, அபராதமோ நீர்வளத்துறை விதிக்கவில்லை' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பாண்டியன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம், 2007ல் இயற்றப்பட்டது. அப்போது, ஒரே துறையாக இருந்த பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஆறு, ஏரி, குளம், கண்மாய், கால்வாய், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பதே முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது. 18 ஆண்டுகள் ஆகியும், இச்சட்டத்தின் கீழ் யாராவது ஒரு ஆக்கிரமிப்பாளரை கண்டுபிடித்து, தண்டனையோ, அபராதமோ நீர்வளத்துறையினர் விதித்தது உண்டா?

சட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில் கண்மாய், கரை, வாய்க்கால், ஆறு அனைத்துமே ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தாத நீர்வளத்துறை அதிகாரிகளால் தான் ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது.

சட்டத்தை மறு வரையறை செய்து, கூடுதல் சிறை தண்டனை, கூடுதல் அபராதம் விதித்து தமிழக அரசு திருத்தம் செய்தால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து நீர்நிலைகளை நிரந்தரமாக பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us