/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சுகன்யா குரூப் ஆப் கம்பெனிஸ் இல்ல திருமண விழா அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

ADDED : பிப் 21, 2026 05:08 AM
மதுரை: மதுரை சுகன்யா குரூப் ஆப் கம்பெனிஸ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரை, அருப்புக்கோட்டை , காஞ்சிபுரம், வெள்ளிக்குறிச்சி பகுதிகளில் செயல்படும் சுகன்யா குரூப் ஆப் கம்பெனி நிறுவனரும், தொழிலதிபருமான சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த ராமக்கிருஷ்ணனின் பேரனும் தில்லை நடராஜன்- சுபாஷினி மகனுமான ராம்பிரசன்னாவுக்கும், மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்- அன்புச்செல்வி மகளான பவதாரணிக்கும் திருமண விழா மது ரையில் ஐடா ஸ்கட்டர் வேலம்மாள் அரங்கத்தில் நடந்தது.
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.பி.,க்கள் தமிழச்சி தங்க பாண்டியன், மாணிக்கம் தாகூர், அமைச்சர் தங்கம் தென்னரசு குடும்பத்தினர், வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, ராஜன் செல்லப்பா, புதுார் பூமிநாதன் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்,பா.ஜ., பேராசிரியர் ராம சீ னிவாசன், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள், சுகன்யா குரூப் ஆப் கம் பெனிஸ் நிறுவன ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.