/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தரிசு நிலத்தொகுப்புகளில் வேளாண் திட்டங்கள் அமல்
/
தரிசு நிலத்தொகுப்புகளில் வேளாண் திட்டங்கள் அமல்
ADDED : நவ 08, 2024 07:28 AM
மதுரை: மேலுார் தாலுகா உறங்கான்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு கொய்யா, எலுமிச்சை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே. அதில் நீராதாரம் பெருக்குதல், மின்இணைப்பு, சூரிய சக்தி பம்பு செட்களுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துதல், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், உலர்களம், சேமிப்பு கிடங்கு அமைத்தல், கால்நடைகள் பாதுகாப்பு, பால் உற்பத்தி போன்ற எல்லா திட்டங்களையும் ஒன்றிணைத்து கிராமத்தில் தன்னிறைவு பெறுவதாகும்.
மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 170 கிராமங்களில் ரூ.1.42 கோடி மதிப்பில் வேளாண் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் 78 ஆயிரத்து 33 பேர் பயனடைந்துள்ளனர். 2021 - 22 ல் வேளாண் துறையில் 13 ஒன்றியங்களிலும் 19 பகுதியில் 252 விவசாயிகளைக் கொண்ட 20 தொகுப்பு நிலங்கள் உருவாக்கப்பட்டது.
அதில் ஆழ்துளை கிணறு, இலவச மின்இணைப்பு, 1 சோலார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கொய்யா, எலுமிச்சை, மா, முருங்கை, நாவல் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.

