/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம் துவக்கம் முறியடிக்க போக்குவரத்து கழகம் விரிவான ஏற்பாடு
/
மதுரையில் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம் துவக்கம் முறியடிக்க போக்குவரத்து கழகம் விரிவான ஏற்பாடு
மதுரையில் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம் துவக்கம் முறியடிக்க போக்குவரத்து கழகம் விரிவான ஏற்பாடு
மதுரையில் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம் துவக்கம் முறியடிக்க போக்குவரத்து கழகம் விரிவான ஏற்பாடு
ADDED : ஜன 09, 2024 05:47 AM
மதுரை : மதுரையில் நள்ளிரவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை துவக்கினர். பாதிப்பு ஏற்படாமல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் அகவிலைப்படி உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் அமல், ஓய்வூதிய பணபலன் வழங்கல் உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.9) முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக சி.ஐ.டி.யூ., அண்ணாதொழிற்சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் நோட்டீஸ் வழங்கி இருந்தன. மதுரையில் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏற்கனவே அறிவித்தபடியால் பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது. வெளியூர் பயணிகள் சிலர் தவித்தனர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தது. மண்டல மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:
வேலைநிறுத்த அறிவிப்பு வந்தது முதலே மாற்று ஏற்பாடுகளும் செய்து விட்டோம். வெளியூர் செல்லும் ஊழியர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் பணி செய்வர். அவர்களை தொடர்ந்து பணிசெய்யும்படி தெரிவித்துள்ளோம். தற்காலிக பணியாளர்கள் 100 பேரை ஏற்பாடு செய்துள்ளோம்.
வாரிசு அடிப்படையிலான, பயிற்சி முடித்த 72 நடத்துனர்களையும் தயார் செய்துள்ளோம். இலகு பணி வழங்கிய 200 க்கும் மேற்பட்டோரை பணிக்கு வரும்படி கூறியுள்ளோம். எந்தெந்த கிளைகளில் போராட்டத்தில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதோ அதை கணக்கெடுத்து அங்கு கூடுதல் ஊழியர்களை நியமித்துள்ளோம். இயங்கும் பஸ்களை தடுத்தால் நடவடிக்கைக்கு காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 3:00 மணி முதலே டெப்போவில் ஊழியர்களை தங்க வைத்து உணவு முதல் தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லா டெப்போவிலும் பொறுப்பு மேலாளர்களை நியமித்துள்ளோம். எனவே பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஐ.டி.யூ., மத்தியசங்க செயற்குழு உறுப்பினர் குருசாமி, கடந்த ஆட்சியில் செய்யாததை நாங்கள் செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்தபின், மூன்றாண்டுகளாக கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே விரக்தியில் உள்ள தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்கிறோம்'' என்றார்.