/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில்.... இருப்பது லட்சம்... பதிந்தது ஆயிரம்...: விழிப்புணர்வு இல்லாததால் கிடைக்காத உதவிகள்

ADDED : ஜூலை 17, 2025 12:35 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் சீர்மரபினர் சமுதாயத்தினரும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்மரபினர் சமுதாயத்தில் (De Notified Community) பிரமலைக்கள்ளர், வலையர், ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர், செட்டிநாடு வலையர், கந்தர்வகோட்டை கள்ளர், மறவர்கள், படையாட்சி, செம்பநாடு மறவர், வேட்டுவ கவுண்டர் உட்பட பல பிரிவினர் மதுரை மாவட்டத்தில் வசிக்கின்றனர். இச்சமுதாயத்தினர் மேம்பாட்டுக்கென தனி நலவாரியம் உள்ளது. இதில் 18 - 60 வயதுக்குட்பட்டோர் உறுப்பினராக சேர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
விழிப்புணர்வு இல்லை
பதிவு செய்வோர் விபத்தில் மரணமடைந்தால் நிவாரணம் ரூ.1.25 லட்சம், ஊனம் ஏற்பட்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை, இயற்கை மரணத்திற்கு ரூ.30 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. திருமண, மகப்பேறு, கருச்சிதைவு, கருக்கலைப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி உட்பட 15க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இத்தனை இருந்தும் இதுவரை 20 ஆயிரம் பேர் வரையே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.
உறுப்பினர்களை அதிகரிக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் இச்சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து முகாம் நடத்துகின்றனர். இருப்பினும் முகாமில் நுாறுக்கும் குறைவானோரே பதிவு செய்கின்றனர். இதனால் கடைக்கோடி கிராமத்தினர் பயன்பெற இயலாமல் போய்விடுகிறது.
தொழிலாளர் நலவாரியத்தில் 18 வயது பூர்த்தியடைந்த குடும்ப உறுப்பினர் எவரும் சேர்ந்து அடையாள அட்டை பெற முடியும். ஆனால் இத்துறையில் குடும்பத்தில் ஒருவரே உறுப்பினராக சேர்ந்து அவர் மட்டுமே அனைத்து உதவிகளையும் பெற வாய்ப்பு உள்ளது. தாலுகா அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் செயல்படும்போதும், வி.ஏ.ஓ.க்களை முழுமையாக இப்பணியில் ஈடுபடுத்தும்போதும் இவ்வாரியத்தில் அனைவரையும் சேர்க்க இயலும். அதன் மூலம் அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும். கலெக்டர் பிரவீன்குமார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.