/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகம் திறப்பு விழா
/
மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகம் திறப்பு விழா
ADDED : நவ 30, 2024 05:16 AM
மதுரை; மதுரையில் அழகர்கோவில் ரோடு சர்வேயர்காலனி - சம்பக்குளம் ரவுண்டானா அருகில் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தனர். மூன்று தளங்கள் கொண்ட இவ்வலுவலகத்தில் தரைத்தளத்தில் பதிவு வைப்பறை, சர்வேயர், கண்காணிப்பாளர், எழுத்தர் அறை, சுகாதார அலுவலர், தேர்தல், உதவி செயற்பொறியாளர்கள் அறைகள், முதல் தளத்தில் மண்டலத் தலைவர், கருத்தரங்கு, உதவிப்பொறியாளர்கள் அறைகள், இரண்டாம் தளத்தில் தலைமை அறைகள் அமைந்துள்ளன.
துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, நகர்நல அலுவலர் இந்திரா, பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன் பங்கேற்றனர்.

