/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்.ஜி.ஓ., சங்கம் அறிவிப்பு

ADDED : ஜன 13, 2024 04:00 AM
மதுரை : பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என, அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.,சங்கம்) மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு, தனியார் ஏஜென்சிகள் மூலம் ஊழியர்கள் நியமிப்பதை கைவிடுதல், ஏழாவது ஊதிய கமிஷனில் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஆசிரியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியத்தில் பல்லாண்டுகளாக பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
இவற்றை வாக்குறுதிகளாக தந்து ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். இதற்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பல்வேறு கட்ட போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்ட தீர்மானத்தின்படி மதுரையில் ஜன.,20ம் தேதி போராட்ட தயாரிப்பு ஆயத்தக் கூட்டம் நடக்க உள்ளது. அதன்பின் ஜன.,30ல் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் நடக்க உள்ளது.
பின்னர் பிப்.,5 முதல் 9 வரை கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு பிரசார இயக்கம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடத்தப்படும்.
அதன்பின்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பிப்.,15 முதல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னும் நிறைவேற்றாத பட்சத்தில் பிப்.,26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.