/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
/
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
ADDED : ஆக 17, 2025 03:56 AM
மதுரை: மதுரையில் நேற்றுமுன்தினம் 79வது சுதந்திர தினம் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.
பள்ளி, கல்லுாரி * அரோபனா இந்தியன் பள்ளியில் நிர்வாக இயக்குநர் அபிலாஷ் கொடியியேற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செயலாளர் சந்திரன் பரிசு வழங்கினார். இணை இயக்குநர் நிக்கி புளோரா, முதல்வர் கிறிஸ்டிலா சைலஸ் கலந்துகொண்டனர். ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் செயலாளர் சந்திரன் கொடி ஏற்றினார். நிர்வாக இயக்குநர் அபிலாஷ் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இணை இயக்குநர் நிக்கிபுளோரா, மூத்த முதல்வர் ஞானசுந்தரி, முதல்வர் ஜெயலட்சுமி உடன் இருந்தனர்.
* பாத்திமா கல்லுாரி மாணவர்கள் அம்பலத்தடி, டி.ஆண்டிப்பட்டி, திருமால்நத்தம் கிராமங்களில் கிராமசபைகளில் கலந்து கொண்டனர். நிதி ஒதுக்கீடு, மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட்டது. கல்லுாரி ரோசா அமைப்பின் சார்பில் உதவி ஆசிரியர்கள் ஆஸ்நெட் மேரி, சாந்தி, பூர்ணிமா சேதுபதி, பெர்னிட்டா, சுகன்யா ஏற்பாடு செய்தனர்.
* வில்லாபுரம் மை மதுரை மாண்டிசோரி பள்ளியில் துணை முதல்வர் அபராஜிதா, இயக்குனர் கண்ணன் கொடி ஏற்றினர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் கீதா கண்ணன் பரிசு வழங்கினார்.
* தமிழ்நாடு மருத்துவ அணி என்.சி.சி., சார்பில் கேப்டன் சூர்யா அறிவுறுத்தலில் பிட் இந்தியா சைக்கிள் பேரணி நடந்தது. சேதுபதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், சுபேதார் மல்லப்பா, என்.சி.சி., அதிகாரி பாலாஜி, மணிகண்டன், பேராசிரியர் முரளிதரன் உடன் இருந்தனர். சேதுபதி பள்ளி, மதுரை கல்லுாரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
* லேடி டோக் கல்லுாரியில் நகர் போலீசார், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த விழாவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், ரெட்கிராஸ் கிளை செயலாளர் ராஜ்குமார் பேசினர். பேராசிரியர்கள்லட்சுமி, கலைவாணி, சர்மிளா ஒருங்கிணைப்பு பணி மேற்கொண்டனர்.
* இடையப்பட்டி கே.வி. பள்ளியில் மூத்த ஆசிரியர் விவேக் பாண்டே கொடியேற்றினார். ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
அமைப்புகள் * நேதாஜி தேசிய இயக்கம், தங்கமயில் ஜூவல்லரி சார்பில் ரத்ததான முகாமை சிவகிரி நாதலிங்கேஸ்வரர் சுவாமிகள் துவக்கினார். ஜூவல்லரி மேலாளர்கள் ரங்கராஜன், செல்வம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மேலாளர் அண்ணாதுரை உடன் இருந்தனர். கவிஞர் ராஜ பிரபாவின் நுால் வெளியீடும் நடந்தது. தியாகராஜர் கல்லுாரி, மதுரை கல்லுாரி மாணவர்கள் தன்னார்வ தொண்டர்களாக செயல்பட்டனர்.
* தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு சார்பில் ஓட்டல் ஜான்சில் நடந்த விழாவில் மண்டலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ரஞ்சித் கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் அழகேசன், துணைத்தலைவர்கள் பரிமளநாதன், வெங்கடேசன், ராஜேந்திரன், இணைச்செயலாளர் செல்வகுமார் உடன் இருந்தனர்.
* ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில துணை தலைவர் பாஸ்கர் கொடியேற்றினார். நகர் தலைவர் பாக்கியநாதன், துணைத் தலைவர் ஆனந்த், பொதுச்செயலர் பாலமுருகன் கலந்துகொண்டனர்.
* மதுரை அழகப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்க விழாவில் கவுன்சிலர் போஸ் கொடியேற்றினார். சிறப்பு விருந்தினர் பாண்டி குமார், சங்கத் தலைவர் சடகோபன், பொருளாளர் தங்கம், செயலாளர் ரவிசங்கர் கலந்துகொண்டனர்.
* எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் டிரஸ்ட் சார்பில் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ். சீனிவாசன் தலைமையில் தலைவர் கணபதி நரசிம்மன் கொடியேற்றினார். நிர்வாகிகள் ஸ்ரீகுமார், குருராஜன் பங்கேற்றனர்.
* மதுரை வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் திருப்பதி கொடியேற்றினார். பொது செயலாளர் ரவிச்சந்திரன், செயலாளர்கள் ரவிச்சந்திரன், ராஜ்குமார், ஆசைத்தம்பி, பொருளாளர் ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பாலமுருகன், சுப்பையா, கிருஷ்ணமூர்த்தி, ஜனார்த்தனன் கலந்து கொண்டனர்.
* மணிகண்டன் நகர் நலசங்கத்தில் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமர் முரளி, கவுன்சிலர் ஜனா ஸ்ரீ முருகன் கலந்துகொண்டனர்.
* அவனியாபுரம் பெரியசாமி நகர், திருப்பதிநகர் குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் பன்னீர்செல்வம் கொடியேற்றினார். கவுரவ தலைவர் குருசாமி, துணை தலைவர் வேல்முருகன், செயலாளர் அழகுராஜ், பொருளாளர் சந்திரசேகரன், இணைச் செயலாளர் நேதாஜி, துணை செயலாளர் ஜெயலட்சுமி கலந்துகொண்டனர்.
* மதுரை சிங்கராயர் காலனி 'இமேஷ் உமன்ஸ் அசோசியேஷன்,' சார்பில் பெண்கள் மரக்கன்று, பூச்செடிகளை மக்களுக்கு வழங்கினர்.
* மதுரை சூர்யா நகர் சுபாசினி நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் கவுன்சிலர்கள் ராதிகா, முத்துகுமாரி கொடியேற்றினர். தலைவர் ஆண்டி, நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
* மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்க விழாவில் உப தலைவர் சேதுராம் கொடியேற்றினார். செயற்குழு உறுப்பினர் நரசிம்ம ராஜ், செயலாளர் ரகுபதி, சேது ராம், கருணையானந்தன், ஹரிபாஸ்கர் பேசினர். பொருளாளர் காசி, இணைசெயலாளர்கள் திரவியம், சங்கர், வீரசின்னு, அகஸ்திய பாரதி, காளிமுத்து கலந்து கொண்டனர்.
* மக்கா குப்பை மறுசுழற்சி செய்யும் மகாமாயன் கவுரவிக்கப்பட்டார். 'எழில் கூடல்' திட்டத்தில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பாரிஜாதம், மகாத்மா குப்பை அகற்றினர். செயற்குழு உறுப் பினர் அபு புக்கர் நன்றி கூறினார்.
* மதுரை எல்லீஸ் நகர் ஜூபிடர் குடியிருப்போர் நலசங்க விழாவில் தலைவர் ராமநாதன் தலைமையில் ஆலோசகர் வெங்கட் சுப்பிரமணியன் கொடியேற்றினார். சுரேஷ், உஸ்மான்அலி, வைத்தியநாதன், ஜாபர், கண்ணன், ஈஸ்வரபிரசாத், சந்தனமாரி, கலந்துகொண்டனர்.
* மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் காந்தி மியூசியத்தில் நிறுவனர் மணிகண்டன் மரக்கன்றை மியூசிய செயலாளர் நந்தாராவிடம் வழங்கினார். பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், ஈஸ்வரன், சசிகுமார் உடன் இருந்தனர்.
* துவரிமான் வெங்கடாஜலபதி நகர் குடியிருப்போர் நலசங்க விழாவில் தலைவர் ரமேஷ், செயலாளர் வெங்கட்ரமணன் தலைமையில் முன்னாள் பொருளாளர் வெங்கட்ராமன் கொடியேற்றினார். நிர்வாகிகள் அய்யனார், கண்ணன் அழகர்சாமி, சண்முகராஜன், தேன்ராஜ் பங்கேற்றனர்.
* மதுரை பொன்மேனி சவுரப்யா அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த விழாவில் இளமதி நடராஜன் கொடியேற்றினார். செயலாளர் முத்துலட்சுமி சரவணன், மூத்த நிர்வாகி கண்ணன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.
* மதுரை நுகர்வோர் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க விழாவில் சங்க தலைவர் மோகன் தலைமையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பாஸ்கரன் கொடியேற்றினார். நிர்வாகிகள் ராஜா, மாரியப்பன் உடன் இருந்தனர்.
* மதுரை கே.கே.நகர் நியூ எல்.ஐ.ஜி., நகர் குடியிருப்போர் நலச்சங்க விழாவில் தலைவர் ஈஸ்வரராவ் கொடியேற்றினார். சிறப்பு விருந்தினர்கள் கவுன்சிலர் ராஜேஷ்கண்ணா, கண்ணா, சுல்தான், சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைதலைவர் அரங்கண்ணன், பொருளாளர் குமரப்பன் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம் * திருநகர் ராணி மங்கம்மாள் சாலை குடியிருப்போர் நலசங்கம் சார்பில் தலைவர் மணி கலையரசன் தலைமையில் செயலாளர் சீனிவாசன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் கணேசன், முத்துமுருகன், கண்ணன், பாண்டித்துரை, கோவிந்தராஜ், சாஸ்தா, விஷ்ணு, கார்த்தி, ரகுநாதன், ஸ்ரீராம் சுந்தர் 2 ஆயிரம் பேருக்கு தேசியக்கொடி வழங்கினர்.
* திருநகர் மக்கள் மன்றம் சார்பில் அண்ணா பூங்கா அருகே இணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மதுரா கோட்ஸ் முன்னாள் முதல் நிலை மேலாளர் பாண்டியராஜன் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் பொன் மனோகரன் நன்றி கூறினர்.
* விளாச்சேரி காங்., சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் தலைவர் தயாளன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் பிச்சை, ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.
* தென்பழஞ்சியில் பார்வையற்றோர் மறுவாழ்வு நல சங்கத்தில் கவுன்சிலர் சுவிதா கொடி ஏற்றி நலத்திட்ட உதவி வழங்கினார். தலைவர் குமார், செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் கோவிந்தராஜன், துணை தலைவர் லட்சுமி, துணைச் செயலாளர் சுதா கலந்து கொண்டனர்.
* மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா முன்னிலை வகித்தனர். பொருளாதார துறை தலைவர் பழனி கொடி ஏற்றினார். என்.சி.சி., வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் திருஞானசம்பந்தம், வெங்கடேசன், நரசிம்மபாண்டியன் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
* சவுராஷ்டிரா கல்லுாரியில் முதல்வர் சீனிவாசன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன் முன்னிலையில் தலைவர் பன்சீதர் தேசிய கொடியேற்றினார். என்.சி.சி. அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார். சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கொடி ஏற்றினார். முதல்வர் பொன்னி நன்றி கூறினார்.
* திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் தாளாளர் நோவா தலைமையில் பட்டிமன்ற நடுவர் திருநாவுக்கரசு கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள் ஸ்டெல்லா தங்கம், ஏஞ்சலின், ஜெபமேரி, வர்ணபிரியா, நர்மதா கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கார்த்திக்குமரன், என்.சி.சி., அலுவலர் ஆதி பெருமாள்சாமி, விடுதி அலுவலர் சங்கரலிங்கம், திட்ட அலுவலர் செண்பக பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர், பேராசிரியர் செல்வி நன்றி கூறினார்.
* திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரன் தேசிய கொடியேற்றினார். மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேலு பேசினர்.
* விரகனுார் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்மணி கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, கல்வியாளர் பிரபு, பெண்கள் நீதி அமைப்பு கிருஷ்ணா, ஆசிரியர்கள் தேன்மொழி, அழகுமீனாள், விஜயலட்சுமி, வள்ளிநாயகி, சேகர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பூர்ண வள்ளி தொகுத்துரைத்தார். ஆசிரியர் பிரமிளா நன்றி கூறினர்.
* திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் தலைவர் சரவணன் கொடி ஏற்றினார். செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார். என்.சி.சி., அலுவலர் முகமது கவுஸ் தலைமையில் அணிவகுப்பு நடத்தினர். ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.
* விளாச்சேரியில் கிராம சபை கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா அறிக்கை வாசித்தார். பல்லாண்டு காலமாக பொம்மைகள் செய்வதற்காக விளாச்சேரி கண்மாயில் களிமண் எடுக்கப்பட்டது. சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கண்மாயில் பொம்மைகள் செய்வதற்காக மட்டும் களிமண் எடுக்க அனுமதி வேண்டும் என பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். சாமநத்தம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் செயலாளர் கண்ணன் அறிக்கை வாசித்தார். அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலுார் * வலைச்சேரிபட்டியில் பற்றாளர் அழகர்சாமி தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சமூக ஆர்வலர் சரவணன் தேர்தலில் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும் என கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
* மேலவளவு, கண்மாய்பட்டியில் தனி அலுவலர் மகாராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபாலன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. பல்லுயிர் மேலாண்மை குழு என்ற உள்ளாட்சி அமைப்பை உருவாக்கி உயிரியல் பன்முக தன்மையை பாதுகாக்க, நிர்வகிக்க வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* கருங்காலக்குடியில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் புகையிலை, லாட்டரி சீட்டு இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* இடையபட்டியில் 45ஆவது இந்திய திபெத் எல்லை காவல் படை முகாமில் துணைகமாண்டன்ட் சுமித் குசேன் கொடியை ஏற்றி வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
உசிலம்பட்டி * கருமாத்துார் கிளாரட் பள்ளியில் தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் கொடி ஏற்றினார். பொருளாளர் செல்வமணி, ஆசிரியர்கள் பாத்திமா, ஷீ நல அறக்கட்டளை பாலா மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
* உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு கொடி ஏற்றினார்.
* டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் ராஜேந்திரன் முன்னிலையில் தலைவர் சதீஷ்பாபு கொடி ஏற்றினார். செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் சேகர், ஆசிரியர்கள் சகாயராணி, ராமதிலகம் பங்கேற்றனர்.
* உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கட்டளைமாயன்பட்டியில் தலைமை ஆசிரியர் பொற்செல்வன் கொடி ஏற்றினார். ஆசிரியர் அன்பழகன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினர், மாணவர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர்கள் உசிலம்பட்டி பஜார் நடுநிலைப்பள்ளியில் வீரலட்சுமி, அயோத்திபட்டியில் ஆனந்தி, காமராஜர் நகர் பாண்டிஉமாதேவி, ஜோதில்நாயக்கனுார் சாந்தலட்சுமி, செட்டியபட்டி வசந்தரேகா, சீமானுாத்து அமிர்தசிரோன்மணி, புத்துார் முத்துலட்சுமி, திம்மநத்தம் பாண்டியம்மாள், நல்லொச்சான்பட்டி நிர்மலாமுத்துலட்சுமி, உ.புதுக்கோட்டை அங்காளஈஸ்வரி, ராஜக்காபட்டி கண்ணாயி, பாறைப்பட்டி மனோன்மணி, பெருமாள்கோயில்பட்டி பூங்காவனம், குன்னூத்துப்பட்டி பத்மஸ்ரீ, அம்பாசமுத்திரத்தில் அனிதா, தொட்டப்பநாயக்கனுார் சந்திரவதனம், நாவார்பட்டி தனலட்சுமி, அய்யன்கோயில்பட்டியில் தலைமை ஆசிரியர் சந்திரகலா கொடி ஏற்றினர்.
- சோழவந்தான் * அரசமரத்துப்பட்டியில் பற்றாளர் ஒச்சாதேவன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி தீர்மானம் வாசித்தார். பானா மூப்பன்பட்டியில் பற்றாளர் சந்திரா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மலைச்சாமி தீர்மானம் வாசித்தார். தோட்டகலை அலுவலர் சாம்பசிவம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.
* காடுபட்டியில் பற்றாளர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது. ஊராட்சி செயலர் ஒய்யணன் தீர்மானம் வாசித்தார். குருவித்துறையில் பற்றாளர் ராஜேஸ்வரி முன்னிலையில் செயலாளர் மனோ பாரதி தீர்மானம் வாசித்தார். ரிஷபம் கிராமத்தில் பற்றாளர் பிரியா முன்னிலை வகித்தார். செயலாளர் முத்து வேலம்மாள் தீர்மானம் வாசித்தார்.
* மன்னாடிமங்கலத்தில் பற்றாளர் மகேஸ்வரி முன்னிலையில் செயலாளர் திருச்செந்தில் தீர்மானம் வாசித்தார். நாச்சிகுளத்தில் பற்றாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் கதிரேசன் தீர்மானம் வாசித்தார். வேளாண் அலுவலர் சந்திரன் கலந்து கொண்டார்.
* இரும்பாடியில் பற்றாளர் சுமதி முன்னிலை வகித்தார். செயலாளர் காசிலிங்கம் தீர்மானம் வாசித்தார். சோழவந்தான் எஸ்.ஐ., முருகேசன் கலந்து கொண்டார்.
வாடிப்பட்டி * தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் கொடியேற்றினார். துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலக பணியாளர் பங்கேற்றனர்.
* சமயநல்லுார் ஊராட்சியில் செயலாளர் மனோஜ் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் பற்றாளர் ஏ.பி.டி.ஓ., லதா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மனோஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
* அதலை ஊராட்சியில் பற்றாளர் ராஜசேகர் முன்னிலையில் செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆண்டறிக்கை வாசித்தார். சிறுவாலையில் பற்றாளர் சங்கரி முன்னிலையில் செயலாளர் மஞ்சுளா ஆண்டறிக்கை வாசித்தார்.
* பரவையில் காந்தி சிலைக்கு நகர காங்., சார்பில் நகர் தலைவர் கோபால், துணை தலைவர் விவேகானந்தன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிர்வாகிகள் சிவஞானம், வளர்மதி, ஆனந்தன், காந்தி பங்கேற்றனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* செல்லம்பட்டி ஒன்றியத்தில் தனி அலுவலர் பி.டி.ஓ தங்கப்பாண்டி தலைமையிலும், வாடிப்பட்டி ஒன்றியத்தில் தனி அலுவலர் பி. டி. ஓ கிருஷ்ணவேணி தலைமையிலும் கிராமசபை நடந்தது.
* தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் கிருஷ்டி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி முன்னிலையில் கவுன்சிலர் பூமிநாதன் கொடியேற்றினார். ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார்.
* பொட்டுலுப்பட்டி காந்திஜி அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் கல்வி குழு தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆசிர்வாதம் பீட்டர் வரவேற்றார். பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் கொடி ஏற்றினார். சென்னை அரசு கவின் கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்துரு பேசினார். முன்னோடி விவசாயி அழகு முரளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினார். ஆசிரியர் எஸ்தர் டார்த்தி நன்றி கூறினார்.
* மேட்டுப்பெருமாள் நகர் விஸ்வ பாரதி வித்யா மந்திர் நர்சரி பள்ளியில் முதல்வர் குபேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் மீனா வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகநாதன் கார்த்திக் கொடி ஏற்றினார். ஆசிரியர் ரமலான் நன்றி கூறினார்.
* வாடிப்பட்டி பொன்மலை அடிவாரம் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்ல விழாவிற்கு பவர் ப்ராஜெக்ட் இயக்குனர் மாணிக்கமூர்த்தி தலைமை வகித்தார். எல்.பி.ஜி.,இந்தியா கர்ணன், மோகனப்பிரியா, கூட்டுறவு தணிக்கையாளர் கண்ணன், ஆட்டோ தொழிலாளர் பொதுநலச் சங்க செயலாளர் கவுரிநாதன் முன்னிலை வகித்தனர். இல்ல செயலாளர் ஆசைதம்பி வரவேற்றார். ஹோமியோபதி டாக்டர் பொன் யாழினி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வழக்கறிஞர் முரளிதரன் பேசினார். இல்ல காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
* அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியத்தில் வட்டார காங்., சார்பில் கொடி ஏற்றப்பட்டது. மதுரை வடக்கு மாவட்ட அமைப்புசாரா தலைவர் சோனைமுத்து தலைமை வகித்தார், வட்டார தலைவர் சுப்பாராயலு முன்னிலையில் அமைப்புசாரா மாநில தலைவர் மகேஸ்வரன் கொடியேற்றினார். மாவட்ட இளைஞர் காங்., தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆறுமுகம், கருப்பையா, வீரபாண்டி, அழகு ராஜன் பங்கேற்றனர்.
திருமங்கலம் * தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ் கொடியேற்றினார். சமூக நலத்திட்ட தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் அய்யம்மாள், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், வி.ஏ.ஓ.,க்கள் பாலமுருகன், பாண்டியராஜன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்தார். நீதிபதி மணிகண்டன் முன்னிலை வகித்தார். நீதிபதி செல்வகுமார் கொடியேற்றினார். வக்கீல் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி, செயலாளர் திலீப்குமார், இணைச் செயலாளர் கனகராஜன், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ்குமார், முன்னாள் தலைவர் ராமசாமி பங்கேற்றனர்.
* டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் கொடியேற்றினார். நகர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சரவணன், தாலுகா ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுப்பையா கொடியேற்றினர்.
* நகராட்சியில் தலைவர் ரம்யா கொடியேற்றினார். கமிஷனர் அசோக்குமார் தலைமை வகித்தார். இன்ஜினியர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரகலா கொடியேற்றினார். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளையில் தலைவர் மகபூப்பாபாட்ஷா கொடியேற்றினார். நிர்வாகிகள் பழனிராஜ், ரகுநாதன், பாலகிருஷ்ணன், நடராஜன், வெங்கிடகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இலக்கிய பேரவை நிர்வாகிகள் பூலோக சுந்தர விஜயன், சங்கரன், நமசிவாயம் கலந்து கொண்டனர்.
* கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட செயலாளர் சங்கரன் கொடியேற்றினார். துணை தலைவர் சக்கையா, தென்றல் அரிமா சங்க செயலாளர் குழந்தைவேல், நுாலகர் மலர்விழி, முன்னாள் மாவட்ட நூலகர் இளங்கோ பங்கேற்றனர்.
* இறையன்பு நுாலகம் மற்றும் ஆராய்ச்சியகத்தில் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஞானராஜ் கொடியேற்றினார், நுாலக நிர்வாகி பார்த்தசாரதி பங்கேற்றனர்.
* நகராட்சி 10வது வார்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அஜ்மீர் அலி தலைமை வகித்தார். கவுன்சிலர் ரம்ஜான் பேகம் கொடியேற்றினார். தி.மு.க., வார்டு செயலாளர் ஜாகிர் உசேன், நிர்வாகிகள் சித்திக், ஷேக்இத்ரிஸ், அப்துல் கரீம், மன்சூர் அலிகான் கலந்து கொண்டனர்.