/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உள்கட்டமைப்பில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்கிறது
/
உள்கட்டமைப்பில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்கிறது
உள்கட்டமைப்பில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்கிறது
உள்கட்டமைப்பில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்கிறது
ADDED : செப் 05, 2025 11:40 PM

மதுரை: ''உள்கட்டமைப்பு துறைகளில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது'' என மலேசியா அமைச்சர் குலசேகரன் கூறினார்.
மதுரையில் உள்ள பிரபல குளிர்பான நிறுவனத்தின் தயாரிப்புகளை பார்வையிட்ட மலேசியா பிரதமர் அலுவலக இணை அமைச்சர் குலசேகரன் நமது நிருபரிடம் கூறியதாவது:
தாய்மொழி தமிழை தொப்புள் கொடி உறவாக மலேசிய தமிழர்கள் நினைக்கின்றனர். மலேசியாவில் 527 தமிழ் பள்ளிகள் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 32 மில்லியனில் 2 மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில் 1957 முதலே அரசின் பிரதிநிதிகளாக தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சில புரோக்கர்கள் மூலம் மலேசியா வந்து பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். மலேசியாவில் சம்பாதிப்பதை தமிழத்திலும் சம்பாதிக்க முடியும் என்றளவிற்கு தமிழகம் வளர்ந்துள்ளது. இந்தியா கடுமையான விசா நடைமுறைகளை தளர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் முதலீடு செய்ய பிற நாடுகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு பல மடங்கு உயரும். போக்குவரத்து, உள்கட்டமைப்பு துறைகளில் இந்தியா ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவை பாதிக்காது. தென்கிழக்காசிய நாடுகளுக்கான'ஆசியன்' அமைப்பு வலுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது.
மதுரை- -- மலேசியா நேரடி விமானம் தொடங்குவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
இந்தியா- மலேசியா இடையே அதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன என்றார்.