sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குறு, சிறு ஏற்றுமதிக்கு வழிகாட்டும் 'இந்தியா போஸ்ட்'

/

 குறு, சிறு ஏற்றுமதிக்கு வழிகாட்டும் 'இந்தியா போஸ்ட்'

 குறு, சிறு ஏற்றுமதிக்கு வழிகாட்டும் 'இந்தியா போஸ்ட்'

 குறு, சிறு ஏற்றுமதிக்கு வழிகாட்டும் 'இந்தியா போஸ்ட்'


ADDED : பிப் 24, 2026 06:36 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''குறைந்த எடையளவு பொருட்களை போஸ்ட் ஆபீஸ் மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்பதால் குறு, சிறு தொழில்முனைவோர்கள் இதை பயன்படுத்தலாம்,'' என, மதுரையில் நடந்த உணவுப்பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் இந்தியா போஸ்ட் மதுரை, தேனி மண்டல விற்பனை பிரதிநிதிகள் ஜெய்கணேஷ், செல்வகுமார் பேசியதாவது: ஒருவர் வெளிநாட்டுக்கு ஏதாவது ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் வந்து எங்களிடம் பொருளை காண்பிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருளா இல்லையா என ஆய்வு செய்த பின் நாங்களே பேக்கிங் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம். புதிதாக டி.என்.கே., பெயரில் அஞ்சலக ஏற்றுமதி மையம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதில் உறுப்பினராக சேருவதற்கு கட்டணமில்லை. ஏற்றுமதி இறக்குமதி கோடு (ஐ.இ.சி.,), வங்கிக்கணக்குடன் இணைந்த ஏற்றுமதிக்கான ஏ.டி.,கோடு எண், ஜி.எஸ்.டி., எண், பான், ஆதார் கார்டு இருந்தால் டி.என்.கே., மையத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம். உறுப்பினரான பின், ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருளை வீட்டிலிருந்தபடியே 'புக்கிங்' செய்து அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்.

நீங்கள் அனுப்பும் பொருள் சுங்கத்துறையில் ஏதோ ஒரு காரணத்தால் திரும்ப வராமல் நிறுத்தி வைக்கப்பட்டால் எந்த ஆவணம் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்து ஆவணத்தை அனுப்பிய பின் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப இந்தியா போஸ்ட் உதவுகிறது. மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் மட்டும் டி.என்.கே. உறுப்பினராகும் வசதியுள்ளது. காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை பார்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்.

இன்டர்நேஷனல் ஏர் பார்சல், ஸ்பீடு பார்சல், இன்டர்நேஷனல் டிராக்டு பாக்கெட் சர்வீஸ் (ஐ.டி.பி.எஸ்.,) மூலம் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். குறு, சிறு தொழில்முனைவோர் தங்கள் 2 கிலோ எடைக்கு கீழே உள்ள 'சாம்பிள்' பொருட்களை குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கு ஐ.டி.பி.எஸ். சேவை உதவுகிறது. இரு கிலோவிற்கு மேல் 20 கிலோ அளவு பார்சல் சர்வீஸ் ஆகவும் 30 கிலோ அளவு இருந்தால் ஸ்பீடு போஸ்டில் அனுப்பலாம். அதற்கு மேல் எடையிருந்தால் இரண்டு, பார்சலாக பிரித்து ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதி இறக்குமதி கோடு எண் பெறுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தேவைக்கேற்ப பயனாளியின் வீட்டிலோ போஸ்ட் ஆபீஸ் வளாகத்திலோ நேரடி இலவச பயிற்சி அளிக்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us