sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு

/

 சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு

 சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு

 சுவாமி உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் நடக்காது சுவாமிநாத சிவாச்சாரியார் பேச்சு


ADDED : பிப் 24, 2026 06:29 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சுவாமியை மனம் ஒருங்கிணைத்து, வழி படுவது அவசியம்; அவர் உத்தரவு இல்லாமல் அற்புதங்கள் எதுவும் நடக்காது என மதுரையில் நடந்த ஆன்மிக சொற் பொழிவில் சுவாமிநாத சிவாச்சாரியார் பேசினார்.

மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் ஒருவரையும் பிப்.25 வரை எண்மர் போற்றும் எண் குணத்தான் எனும் இசையரங்கம், உரை யரங்கம் நடக்கிறது.

நேற்று 'தேடி கண்டு கொண்டேன்' எனும் தலைப்பில் அருண்பிரபா ரெங்கநாதன் இசையுரை வழங்க, சுவாமிநாத சிவாச்சாரியார் பேசியதாவது:

அனுபவம் என்பது வேறு; அனுபூதி என்பது வேறு. அனுபூதி இருந்தால் தான், ஒருவரால் ஆச்சாரியாராக முடியும். பெரிய ஞானிகளுக்கு தான் அந்த பக்குவம் வரும்; இதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. அனுபூதி என்பது இலவசம் கொடுத்து தேர்தலில் ஜெயிப்பது போன்றது இல்லை; அதை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. மனம் ஒன்றி சுவாமியை வழி படுவது அவசியம். சுவாமி உத்தரவு கொடுக்காமல் அற்புதங்கள் நடக்காது.

அக்காலத்தில் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை தவறான வழியில், சமணர்கள் வழிநடத்தினார்கள். இதனால், திருஞானசம்பந்தர் மதுரைக்கு வரும்போது, தங்களின் பிழைப்பு போய்விடும் என்று அவரை தடுக்க நினைத்தார்கள். தமக்கு சமம் இல்லாதவர்களிடம், பெரியவர்கள் வாக்கு வாதம் செய்வதில்லை.

திருஞானசம்பந்தர், சொக்கநாத சுவாமியை வேண்டி, தடைகளை தகர்த்தார். நல்லவர் க ளுக்குதான் சோதனைகள் அதிகம் வரும். இன்று பலர் விளம்பரத்திற்காக, தேவையற்ற பிரச்னைகளில் உருவாக்குகின்றனர். உண்மையாக தவம் செய்பவர்கள் வெளியே தெரிய மாட்டார்கள்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ் பேசுவதும், எழுதுவதும் அவசியம். இவ்வாறு பேசினார்.

இன்று மாலை 6:30 மணிக்கு 'தந்தது உந்தனை கொண்டது என்தனை' தலைப்பில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us